Ops Eps : ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.
2021 சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு இருவரும் பிரிந்தனர். தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
இதற்கு ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்தார்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். ஓ. பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அதிமுகவின் பெயர், கொடி, சினத்தை ஓ. பன்னீர் செல்வம், பயன்படுத்த தடை கோரியுள்ளார்.இந்த மனு நாளை (செப்.20) விசாரணைக்கு வருகிறது.
அதில், ஓ பன்னீர் செல்வம் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“