அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த முடிவு செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிடக்கோரிதோடு மட்டுமல்லாமல் வழக்கை முடித்து வைக்கவும், கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டால் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. எனவே இதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜன.30) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக போட்டியிடுவதில் சின்னம் தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/