பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தடுப்புக் காவலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அவரது தடுப்புக் காவலுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவரை விடுதலை செய்யுமாறு நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
யூடியூபர் சவுக்கு சங்கர் இரண்டு மாதங்களாக குண்டர் சட்டத்தின் கீழ் மாநில காவல்துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த உத்தரவை அறிவித்தது.
விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு சில கேள்விகளைக் கேட்டது. அப்போது, "நாம் ஏன் (அவருக்கு) இடைக்கால பாதுகாப்பை வழங்கக்கூடாது? என மாநில அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மனுதாரர், சவுக்கு சங்கரின் தாயார், தமிழக அரசின் ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதில் தனது மகன் முக்கியப் பங்காற்றியுள்ளார் எனக் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“