தமிழ்நாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. பெரும்பாலான கோவில்களில் இன்னமும் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “தமிழக கோவில்களில் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது. இந்த கோவில் நிதியை செலவிட ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? எனக் கேள்வியெழுப்பியது.
தொடர்ந்து, சமூக நலத் திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சொகுசு காரியங்களுக்கு பயன்படுத்துவது தவறு” எனக் கூறியது. அதாவது, கோவில் நிதியை கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. அதேநேரம், உயர் ரக சொகுசு கார்கள் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்த கூடாது” எனத் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“