தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பதுதான் சரியாக இருக்கும்” என்றார்.
தொடர்ந்து, முதல் முறை மசோதா அனுப்பப்பட்ட போதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கலாமே? மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டு மறுநிறைவேற்றம் செய்த பின் அனுப்பியது ஏன்? எனவும் கேள்வியெழுப்பினார்.
மேலும், மசோதாக்களை சட்டப்பேரவைக்கு ஆளுநர் திருப்பி அனுப்பாததால் அவர் தரப்பிலும் குழப்பம் உள்ளது. ஆகவே தற்போதைய முட்டுக்கட்டையை ஆளுநர் தரப்புதான் நீக்க வேண்டும்.
முதலமைச்சருடன் அமர்ந்து பேசி ஆளுநர் தீர்வு கண்டால் அதனை வரவேற்போம்” என்றார். இந்த வழக்கு விசாரணையின்போது, ஆளுநர் 10 மசோதாக்களுக்கான ஒப்புதலைத் தடுத்து நிறுத்தியதாகவும், ஆனால் அதை மறுபரிசீலனைக்காக தமிழக சட்டசபைக்கு அனுப்பவில்லை என்றும் திமுக அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்த வழக்கில் டிசம்பர் 11 ஆம் தேதி ஆளுநரின் வாதத்தை உச்ச நீதிமன்றம் கேட்க உள்ளது. இன்று நடந்த விசாரணையில், “குடியரசுத்தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கான அதிகாரங்கள் விரிவானது; ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல; ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்கச் (kill the bill) செய்யவோ, முடக்கி வைக்கவோ அதிகாரம் இல்லை.
Withheld assent என்று முன்பு முடிவெடுத்த ஆளுநர் தற்போது ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்? எனவும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வியெழுப்பி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“