scorecardresearch

அ.தி.மு.க வேட்பாளரை பொதுக் குழு முடிவு செய்யட்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொது வேட்பாளரைதான் ஏற்க முடியும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறினார்கள்.

Supreme Court postpones verdict in AIADMK case

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “எங்களின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்-ஐ ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மறுபுறம், பொது வேட்பாளரைதான் ஏற்க முடியும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறினார்கள். அப்போது நீதிபதிகள், இரண்டு பேரும் முரண்டு பிடிக்கிறீர்கள்.
நாங்கள் இதில் சில தீர்வுகளை வழங்க விரும்புகிறோம். மேலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இதில் முக்கிய முடிவுகள் எதையும் பிறப்பிக்க இயலாது. ஆகவே அதிமுக பொதுக்குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்யட்டும்” என்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்.7ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
முன்னதாக ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் இரட்டை இலை கோரி விண்ணப்பித்த நிலையில், சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி விதிகளின்படி முடிவு செய்வார் என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: The supreme court ordered that the general committee decide the admk candidate

Best of Express