நாட்டின் வரவு செலவு திட்ட இடைக்கால அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் மு. அப்பாவு, தமிழ்நாட்டின் திட்ட வரவு செலவு நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) பிப்.19,2024ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டின் முத்திரை சின்னம் வெளியாகி உள்ளது. இந்த முத்திரை சின்னத்தில், “தடைகளை தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
பிப்.19 பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர், பிப்.20ஆம் தேதி முன்பண மானிய கோரிக்கையும், 21ஆம் தேதி 2023-23 முன்பண மானிய செலவினங்களயும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் பிப்.12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
அப்போது கடந்த முறையே போன்று இம்முறையும் சில சர்ச்சைகள் எழுந்தன. ஆளுநரின் செயல்பாட்டுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“