தமிழ்நாடு சபாநாயகர் மு. அப்பாவு இன்று (ஜூ்ன் 7, 2024) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது” என்றார்.
இது குறித்து மேலும் பேசிய மு. அப்பாவு, “வருகிற (ஜூன்) 24ஆம் தேதி காலை 10 மணிக்கு துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்தும் எந்தெந்த நாள்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும்” என்றார்.
அதாவது, 10 நாள்களுக்கு முன்பாகவே இந்தக் குழு முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டில் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர், பிப்ரவரி 12ஆம் தேதி கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மற்றும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அதாவது பிப்.19ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தெடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் பிப்.22ஆம் தேதி நடைபெற்றது. மேலும் இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடர், மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டம் நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“