madras-high-court | மறைந்த தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மற்றும் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டசபை நேரடி ஒளிபரப்பு தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
விஜயகாந்த் மரணம் அடைந்த நிலையில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கானது, ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “நாடாளுமன்றத்தில் அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்னப் பிரச்னை? எனக் கேள்வியெழுப்பினார்கள்.
இந்த நிலையில், “தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, “கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட், அமைச்சர்களின் பதில் உரைகள் என அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, “சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“