Advertisment

‘கோதண்டராமர் கோயில் வளாகத்தில் அடக்குமுறை உணர்வு’; ஆளுநர் கருத்துக்கு பட்டாச்சாரியார் மறுப்பு

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்கு சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்று பதிவிட்ட நிலையில், ஆளுநர் கருத்துக்கு பட்டாச்சாரியார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
RN Ravi Battacharya

ஆளுநர் ஆர்.என். ரவி, கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்று பதிவிட்ட நிலையில், ஆளுநர் கருத்துக்கு பட்டாச்சாரியார் மறுப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று வரும் சூழலில், சென்னை மேற்கு மாம்பலம் கோதண்ட ராமர் கோயிலுக்கு சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்று பதிவிட்ட நிலையில், அடக்குமுறை நடக்கவில்லை என்று ஆளுநர் பட்டாச்சாரியார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டாமகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (22.01.2024) நடைபெறுகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடு முழுவதும் இருந்து முக்கிய வி.ஐ.பி-கள் என ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ரவி இருவரும் திங்கள்கிழமை காலை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.

 

இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி  எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “இன்று காலை  சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  உள்ளது.

பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப்  புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும்  பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது.” என்று தெரிவித்திருந்தார். 

ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் தமிழக கோயில்களில், சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்து அறநிலையத்துறை வாய்மொழி உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில், தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. கோயில்களில், சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்த எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை என்று தமிழ அரசு கூறியது. தி.மு.க அரசுக்கு எதிராக பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

இந்நிலையில்,  “பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த குற்றச்சாட்டுக்கு, மறுப்பு தெரிவித்த சென்னை மேற்கு மாம்பலம் கோதண்ட ராமர் கோயில் ஊழியர் மோகன் பட்டாச்சாரியார் ஊடகங்களிடம் கூறுகையில்,  “சென்னை மேற்கு மாம்பலம் கோதண்ட ராமர் கோயிலில் அடக்குமுறை எதுவும் நடக்கவில்லை; ஆளுநருக்கான பாதுகாப்பை பின்பற்றி அவருக்கு முறையான வரவேற்பை அளித்தோம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment