Advertisment

தீபாவளி பட்டாசு குறித்து பேச்சு: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: தமிழக அரசு அனுமதி

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Activist Piyush Manush arrested

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் புகார் அளித்திருந்தார்.

அதில், “கடந்த ஆண்டு வலையொளி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அதில், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் மிஷனரிகளின் சதி ஒளிந்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.

Advertisment

இது தொடர்பான நான் விசாரித்து பார்க்கையில் அந்த மனுவை தாக்கல் செய்தவர் ஒரு இந்து என்பது தெரியவந்தது.

ஆக அண்ணாமலை பொய்யான தகவலை பரப்பியுள்ளார். ஆகவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 505 (3), 120ஏ மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156 (3) மற்றும் 200 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து பியூஷ் மனுஷ் சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் அனுமதியை கோரியிருந்தது. தொடர்ந்து இதனை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், தமிழக அரசுக்கு அனுப்பிவைத்தார்.

இந்த மனு மீது அரசு வழக்கறிஞர்கள் பரிசீலனை செய்தார். தொடர்ந்து, வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி வழக்கு விசாரணக்கு பரிந்துரைத்தனர். மேலும் அண்ணாமலை மீது புகாரை பதிவு செய்ய செப்.18ஆம் தேதி அனுமதி அளித்தார்.

தற்போது இந்தப் புகாரில் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment