தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது.
இந்த அலுவலகம் அமைந்துள்ள நிலம், ஆதிதிராவிடர்களுக்கு அளிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என சீனிவாசன் என்பவர் தேசிய பழங்குடி ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், தேசிய பழங்குடியின ஆணையம் 2019ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கியது. இதற்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு ஜன.3,2024ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என முரசொலி அறக்கட்டளை தரப்பில் வாதிடப்படப்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், புதிய நோட்டீஸ் அனுப்பி, தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்ப்டது.
இந்த நிலையில், “பட்டியலின ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“