துர்கா ஸ்டாலினை பிக்கப் செய்யச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினை பிக்கப் செய்ய சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு:

தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினை பிக்கப் செய்ய சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு:

author-image
WebDesk
New Update
benz accident

தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினை பிக்கப் செய்ய சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு:

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை வருவதாக இருந்தது, அவருடன் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் வருவதாக இருந்தது. 

இந்நிலையில் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரி இல்லாத காரணத்தினால் தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகைக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் திடீரென ரத்து செய்யப்பட்டது.

ரகுபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்கு தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அவரை பிக்கப் செய்து புதுக்கோட்டை செல்வதற்காக  திருச்சி விமான நிலையம் சென்ற அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பென்ஸ் கார் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அசுர வேகத்தில் சென்றது. 

Advertisment
Advertisements


அப்போது சிக்னல் சிகப்பு விழுந்ததால், பென்ஸ் காரை நிறுத்த முடியாமல் சாலையின் முன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஆட்டோ, இரண்டு இரு சக்கர வாகனங்கள் பலத்த சேதமுற்றது. இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பின்னர், விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் காவல் துறையினர் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: