/indian-express-tamil/media/media_files/YNkZfUOycwqriWJaRtvp.jpg)
கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் மாநாடு நடைபெற்றது.
Marxist Communist Party Womens Conference | Kanyakumari | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிஐடியு பிரிவின் மகளிர் கட்டிட தொழிலாளர்கள் தேசிய மாநாடு கன்னியாகுமரியில் காம்ரேட் மைதிலி சிவராமன் அரங்கில் இன்று (நவ.6) நடைபெற்றது.
இதில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கட்டிட கூலி பணியாளர்கள் அமைப்பை சேர்ந்த 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் பேசிய தோழர் சீலா அலைக்ஸ், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் மோடி தலைமையிலான நாட்டில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பார்சிகள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடாக ஆகிவருகிறது.
ராமநவமி போன்ற விழாக்கள் மட்டுமே உரிமை பெற்ற விழாக்களாக உள்ளன. எதிர்வரும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆளும் மதவாத அரசை வீட்டுக்கு அனுப்புவோம். இதனை உறுதியாக ஏற்று பயணிப்போம்” என்றார்.
இந்த மாநாட்டில் குமரியை சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் என பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.