முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் கொள்ளை... 2 பெண்களிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பல கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் லட்சக் கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து 2 பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப. சிதம்பரம். இவரது வீடு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்கு சென்றுள்ளளனர். இந்நிலையில் அவரது வீட்டில் விலை உயர்ந்த முத்து, மரகதம், மாணிக்கம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பழங்கால தங்க நகைகள், வைர நடைகள் என பல்வேறு நகைகள் திருட்டு போயுள்ளது. மேலும் சுமார் ரூ.1.5 லட்சம் ரொக்க பணமும் மாயமாகியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நகைக்கொள்ளை தொடர்பாக வீட்டு பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, சிதப்ரம் இல்லத்தில் பணிபுரியும் இரண்டு பெண்களையும் போலீஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர்.

×Close
×Close