Advertisment

ரூ.20 லட்சம் செல்போன்கள் மீட்பு: பொதுமக்களிடம் வழங்கிய போலீஸ்

கோவை மாவட்டத்தில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க தனி கவனம் செலுத்தி கண்காணித்து வருவதாக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kovai

கோவை மாவட்டத்தில் குழந்தைகள்  பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க தனி கவனம் செலுத்தி கண்காணித்து வருவதாக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிளான 101 செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் திரும்பி வழங்கப்பட்டது.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் கூறியதாவது 

கடந்த ஆண்டு ஏப் 1 தேதி முதல் தற்போது வரை சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிளான ஆயிரம் செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக பிரிவு அமைத்து மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் செல்போன் மாயமான வழக்குகளை தனியாக கையாண்டு செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதே போல கடந்த ஒரு ஆண்டில் மாவட்டத்தில் சுமார் ரூ.1.9 கோடி மதிப்பிளான 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 330 பேரிடம் நன்னடைபிணை பெறப்பட்டுள்ளது,

15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல கடந்த 3 மாதங்களில் 126 குற்றச்சம்பவங்கள் நடைபெற்று அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிளான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் நடந்த 53 கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 44 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 56 போக்ஸோ வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 26 வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்க தனி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் போதை பெருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 120 கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தனியாக எனக்கு போதை வேண்டாம் கிளப்கள் துவங்கப்பட உள்ளது.

சைபர் கிரைம் குற்றச்சம்பங்களில் இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாகவும், இதுவரை ரூ.90 லட்சம் வரை வங்கி கணக்கில் இருந்து மோசடியாக திருடப்பட்டதாக வந்த புகாரில் ரூ.60 லட்சம் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு திருப்பி பெற்றுத்தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 357 ரவுடிகளில் 300 பேருக்கு பிணை வாரண்ட் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் 57 பேர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

கேரளா கழிவுகளை கோவை மாவட்ட எல்லைக்களில் கொட்டப்படுவது தொடர்பாக போலீசார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. மேலும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment