கடலூர் கலெக்டர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை - ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் இவர், குடும்பத்தினருடன் கடலூரில் தங்கி உள்ளார். நாடியம் கிராமத்தில் உள்ள கலெக்டரின் வீட்டின் காவலுக்காக அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவர் அங்கு தங்கி உள்ளார்.
21ம் தேதி காலை, செல்வம் உறங்கிவிட்டு எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கணினி ஆகியவை கழற்றப்பட்டு வீட்டின் பின் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், இது குறித்து கலெக்டர் அன்புச்செல்வனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து, பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 55 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil