விநாயகர் ஊர்வலம்: தேனியில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பரிதாப பலி

தேனி தேவாரம் பகுதியில் விநாயகர் ஊர்வலத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 3 சிறுவர்கள் பலி.

தேனி தேவாரம் பகுதியில் விநாயகர் ஊர்வலத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 3 சிறுவர்கள் பலி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madurai umachikulam land issues man Died by fire Tamil News

தேவாரம் பகுதியில் விநாயகர் ஊர்வலத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisment

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே நேற்று  விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. 

இதில், மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு, அவர்களது கிராமத்தில் இருந்து விநாயகரை ஊர்வலமாக டிராக்டரில் எடுத்துச் சென்று அருகில் உள்ள ஆற்றில் கரைத்துள்ளனர். 

ஆற்றில் கரைத்தபின் அதே டிராக்டரில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி உள்ளனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் இருந்த மரத்தில் இடித்து, அருகே இருந்த 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

Advertisment
Advertisements

இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2 சிறுவர்கள் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 7 சிறுவர்கள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தேவாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: