Tamil Nadu | Tangedco | தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
திமுகவின் அடுத்த விடியல் என்ற தலைப்பில் சிலர் இதனை பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “கடந்த சில நாள்களாக உலா வரும் மின் கட்டண செய்திகள் பற்றிய உண்மை தன்மை:
அவை முற்றிலும் பழைய செய்தி.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07/ 9.9.2022 தேதியின் படியான கட்டண விகிதம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த ஓரே ஆண்டில் மின் கட்டணங்கள் திருத்தப்பட்டன.
அப்போது, 200 யூனிட் பழைய கட்டணம் ரூ.170ல் இருந்து ரூ.225 ஆக, அதாவது ரூ.55 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதேபோல் 900 யூனிட் கட்டணம் ரூ.4420இல் இருந்து ரூ.5,550 ஆக அதாவது ரூ.1130 உயர்த்தப்பட்டது.
இந்தத் தகவல்கள் தற்போது உயர்த்தப்பட்டது போல் பரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“