கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு (1), சிற்றாறு (2) உள்ளிட்ட அணைகள் உள்ளன.
இந்த அணைகளின் மூலம் பாசன நீர் வசதி பெறப்படுகிறது. மேலும், பேச்சிப்பாறை அணையில் நீர் அளவு குறையும் போதெல்லாம், அணைக்கு அப்பால் உள்ள மலைவாழ் மக்கள் படகில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தப் படகில் ஆங்காங்கே ஓட்டை மற்றும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமென்றாலும் விபத்து ஏற்படலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தப் படகில் தான் மாணவ-மாணவியரும் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள சிதலமடைந்த படகை அகற்றி விட்டு பாதுகாப்பான புதிய படகு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“