விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள தலைவர் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (டிச.6) சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக முன்னர் தகவல் கூறப்பட்டது. விஜய் அப்போது தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதிகாரப் பகிர்வு, 2026 கூட்டணி பற்றி பேசியிருந்தார்.
விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாக அந்த சமயத்தில் ஒரு வீடியோ வெளியானது. ஆட்சியில் பங்கு, கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று அவர் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரம்இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் திருமா, விஜய் பங்கேற்பதாக செய்தி வெளியானது. தி.மு.க கூட்டணியில் திருமா உள்ள நிலையில் இது பெரும் பேசப்பட்டது.
இந்நிலையில், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கட்சி அறிவித்தது. இதையடுத்து இன்று திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். அதில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழவுகு அரசியல் சாயம் பூசப்பட்டது. திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் வி.சி.க அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதுவும் அரசியலாக்கப்படும்.
தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க விஜய் மட்டுமே பங்கேற்கட்டும் என்ற முடிவை எடுத்தோம். விஜய் உடன் எந்த முரண்பாடும் இல்லை. எந்த சிக்கலும் இல்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“