Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live
முக ஸ்டாலின் டிடிவி தினகரன் சந்திப்பு : மதுரையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் தங்கியிருந்தது குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் அமைச்சர் உதயக்குமார்.
Advertisment
சென்னையில் செய்தியார்களை சந்தித்து பேசிய உதயக் குமார் “முக ஸ்டாலினும், தினகரனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பின்னரே இடைத்தேர்தல் குறித்த முடிவுகளை அறிவித்துள்ளனர்” என்று கூறினார்.
மேலும் இருவரும் ஒரே விடுதியில் தங்குவதற்கு முன்பு வரை 18 எம்.எல்.ஏக்கள் பதிவி நீக்கத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்யலாம் என்று கூறினார்கள். ஆனால் அதன் பின்னர், இருவரும் இடைத் தேர்தலை எதிர் கொள்ள விரும்புவதாக கூறியிருக்கிறார்கள் என்று அவர் பேசினார்.
Advertisment
Advertisements
முக ஸ்டாலின் டிடிவி தினகரன் சந்திப்பு : மறுப்பு கூறிய துரைமுருகன் :
இவரின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன். இரு வேறுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஒரே விமானத்தில் பயணக்ககூடாதா, ஒரே விடுதியில் தங்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அமமுக கட்சியின் உறுப்பினரான தங்கத் தமிழ்ச் செல்வனும் இந்த புகார்களுக்கு மறுப்பு கூறியிருக்கிறார்.
வழக்கமாக ஸ்டாலின் தங்கும் நட்சத்திர விடுதியில் அறைகள் காலியாக இல்லாத காரணத்தால் டிடிவி தினகரன் தங்கியிருந்த விடுதியில் ஸ்டாலின் தங்கும் நிலை ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.