/indian-express-tamil/media/media_files/AJSN5bs6QyllbJhbfPvW.jpg)
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் நேற்று முதல் மழை தொடங்கியது. நள்ளிரவில் கனமழை பெய்தது. இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்.15) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்வாரியம் கூறியுள்ளது.
அதன்படி, கங்கன்தொட்டி ஏஸ், ஆர்.கே.நகர் எஸ்.ஏ.கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், எல்லைமுதலி, கல்மண்டபம், தொண்டியார்பேட்டை, ஆர்.கே.நகர், விஓசி நகர், புதினா, பழைய வசாஹர்மென்பேட்டை, TH சாலை பகுதி, டோல்கேட் பகுதி, தொண்டியார்பேட்டை பகுதி, ஸ்டான்லி பகுதி, தொரப்பாடி பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆகியவற்றில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாம்பாக்கம் வலப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகள், நொளம்பூர், ஜே.ஜே.நகர் மேற்கு சின்ன நொளம்பூர், பெரிய நொளம்பூர், குருசாமி சாலை, TNHB கட்டம் I&II, யூனியன் சாலை, வானகரம் சாலை, VGN சாலை, 1 முதல் 8வது பிளாக், மீனாட்சி அவென்யூ, MCK லேஅவுட், MGR பல்கலைக்கழகம், பட சாலை தெரு, ஜெஸ்வந்த் நகர், சிற்றரசூர் முத்துகிருஷ்ணபுரம், ஆராய்ச்சிக்குப்பம், அருங்குணம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், சிலம்பிநாதன்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.