Muthuramalinga Thevar - Gandhi Meenal Natarajan Tamil News
Pasumpon Muthuramalinga Thevar jayanthi Tamil News: முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குருபூஜையின் போது பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படுவது வழக்கம். கடந்த 2014ம் ஆண்டில் ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கியிருந்தார்.
Advertisment
தற்போது அந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையின் போது அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வங்கியில் தங்க கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார்.
ஆனால், தற்போது அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரு பிரிவாக பிரிந்து தனித்தனியாக செயல்படும் நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்குமே தேவர் தங்க கவசம் கொடுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்
Advertisment
Advertisements
இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய காந்தி மீனாள் நடராஜன், இபிஎஸ் ஆதரவாளர்கள் என்னிடம் வந்து பேசியுள்ளார்கள். ஓபிஎஸ் தரப்பிலிருந்து யாரும் ஏதுவும் கேட்கவில்லை. எங்களுக்கு இருவருமே தேவை. இந்த சண்டை எல்லாம் வேண்டாம். இதனால், நானே அதை வங்கியில் இருந்து பெற்று அதன்பின் மீண்டும் நானே வங்கியில் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் (இபிஎஸ் அணி) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அதிமுக சார்பில் வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.