/tamil-ie/media/media_files/uploads/2022/07/Chennai-Police.jpg)
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதியின் மருமகளை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முன்னாள் டிஜிபியாக இருந்த திலகவிதியின் மகன் பிரபு திலக். இவருக்கு சேலத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்பவருடன் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது கணவர் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதாக ஸ்ருதி, சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இதற்கு தனது மாமியார் திலகவதியும் துணை போவதாகவும் புகாரில் குறிப்பிட்டுருந்தார்.
இந்நிலையில் திலகவதியின் மகன் சார்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கே.கே நகரில் வசித்து வரும் ஸ்ருதியை வீடு புகுந்து காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us