திண்டிவனத்தில் ஏசி இயந்திரம் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய திருப்பமாக அவர்களின் மூத்த மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்த ராஜு என்பவரது வீட்டில், ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டதால் ராஜூ, அவரது மனைவி மற்றும் இளைய மகன் பரிதாபமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியது.
இதில் ராஜூ மட்டும் அறையின் வெளியில் ரத்தம் கசிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மகன் மற்றும் மனைவி மட்டும் அறையில் உடல் கருகி இறந்து கிடந்தனர். ராஜூ உடலுக்கு அருகில் காலியான பெட்ரோல் கேன் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை வலுத்தது.அதேபோல் ஏசியின் உள் பக்கம் மட்டும் எரிந்து கிடந்த நிலையில், வெளியில் உள்ள எந்திரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததும் சந்தேகத்தை வலுவாக்கியது. தீ விபத்தில் சிக்கிய ராஜூவின் உடலில் எப்படி ரத்த காயங்கள் ஏற்பட்டன என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் சந்தேகம் முதலில் திரும்பியது ராஜூவின் மூத்த மகனாக கோவர்த்தனன் மீது தான். சம்பவத்தன்று கோவர்த்தனன் தனது மனைவியுடன் பக்கத்து அறையில் இருந்துள்ளார். இதனால் போலீசார் முதலில் அவரை அழைத்து காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் இந்த விசாரணையில் கோவர்த்தனன் தான் திட்டமிட்டு தனது தாய், தந்தை, தம்பியை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மேலும் அவருக்கு துணையாக இருந்த அவரின் மனைவியையும் போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவர்த்தனன் தனது குடும்பத்தாரை கொன்றது எப்படி என? போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
இதுக் குறித்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சொத்துக்கு ஆசைப்பட்டு கோவர்த்தனனே திட்டமிட்டு, தனது குடும்பத்தினரை மண்ணெண்ணெய் ஊற்றிவிட்டு, பிறகு பீர் பாட்டிலினுள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி, அதை வீட்டிற்குள் எறிந்து, கதவை மூடி கொலை செய்துள்ளார். மேலும்
தனது குடும்பத்தில் சொத்து உள்ளிட்ட அனைத்திலும் தம்பி கெளதமனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் வெறுப்பில் மூவரையும் தீர்த்துக்கட்ட கோவர்த்தனன் திட்டமிட்டுள்ளார். .