Third Federal Front talks : பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமை இல்லாத மூன்றாவது அணி ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் ஒவ்வொரு பிராந்திய கட்சித் தலைவர்களையும், முதல்வர்களையும் சந்தித்தும் ஆலோசனை செய்தும் வருகிறார் தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ். கடந்த வாரம் 6ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.
ஆழ்வார் பேட்டையில் ஒன்றரை மணி நேரம் நீடித்த சந்திப்பு
13ம் தேதி ஸ்டாலினை சந்திக்க அவர் முயன்ற போது, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதால் ஸ்டாலினை சந்திப்பது கடினம் என்று திமுக தரப்பு கூறியது. இருப்பினும் நேற்று மாலை 4 மணிக்கு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முக ஸ்டாலின் இல்லத்தில் கே.சி.ஆர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
மூன்றாவது அணியை உருவாக்கும் திட்டத்துடன் கே.சி.ஆர் வந்திருக்கலாம் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தமிழகம் வந்திருப்பது மரியாதை நிமித்தமாக என்று திமுக தரப்பு கூறியது.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முக ஸ்டாலினும் தெலுங்கானா முதல்வரின் வருகையானது மரியாதை நிமித்தமானது தான் என்றும், மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஒன்றும் தற்போது நிலவவில்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்பே மூன்றாவது அணி அமையுமா என்று தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : மு.க.ஸ்டாலின் – கே.சி.ஆர் சந்திப்பு மரியாதை நிமித்தமானது’ – திமுக விளக்கம்