scorecardresearch

30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்: தென்காசி, தேனி-க்கு புதிய கலெக்டர்கள்

தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டார்.

30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்: தென்காசி, தேனி-க்கு புதிய கலெக்டர்கள்

தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட  30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டார்.

இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : “திருநெல்வேலி – கார்த்திகேயன், தென்காசி- ரவிச்சந்திரன் குமரி-ஸ்ரீதர், விருதுநகர்-ஜெயசீலன், கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப், விழுப்புரம்-பழனி, பெரம்பலுார்-கற்பகம்,தேனி-சஜ்ஜீவனா,கோவை-கிராந்திகுமார், திருவாரூர்-சாருஸ்ரீ, மயிலாடுதுறை- மகாபாரதி ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுபோல தொழிலாளர் நலத்துறை திறன் மேம்பாட்டுத்துறை மேலாளராக ஆகாஷ், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக வேங்கடப்ரியா, விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலராக மேகநாத ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக காயத்ரிகிருஷ்ணன், தொழில்நுட்ப கல்வி இயக்குனராக லலிதா, பள்ளி கல்வித்துறை சிறப்பு செலயராக ஜெயந்தி, சாலை மேம்பாட்டுத்திட்ட இயக்குனராக கதிரவன், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக லெட்சுமி , தொழில்த்துறை , முதலீடு மற்றும் வணிகத்துறை சிறப்பு செயலராக பூஜா குல்கர்னி, திட்ட மேம்பாட்டுத்துறை சிறப்பு செயலராக ராஜசேகர் , வருவாய் நிர்வாக இணை ஆணையராக சிவராசு,

ஊரக மேம்பாடு, மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக சகாய் மீனா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல செயலராக லட்சுமிப்ரியா, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் துறை செயலராக குமரகுருபரன் , நீர்பாசனம், விவசாயம் நவீனபடுத்துதல் திட்ட கூடுதல் செயலராக ஜவஹர், நில நிர்வாக ஆணையராக சுப்புலெட்சுமி, ஊரக மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராக பிரசாந்த், தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு இயக்குனராக மோகன், தொழில்த்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி இயக்குனராக விஷ்ணு உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thirthy ias officers have changed the position

Best of Express