Coimbatore, Madurai, Trichy News: மேட்டூர் அணையில் இருந்து 22,000 கனஅடி நீர் திறப்பு: அதிகாரிகள் தகவல்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mettur dam

திருச்செந்தூரில் குளித்த பக்தர்களுக்கு கால்முறிவு: திருச்செந்தூர் கடலில் குளிக்கும்போது அலை இழுத்துச்சென்று பாறைகளில்மோதி10 பக்தர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.கவனமாக கடலில் நீராட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை ஒட்டி சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.

  • Aug 18, 2025 00:40 IST

    மேட்டூர் அணையில் இருந்து 22,000 கனஅடி நீர் திறப்பு: அதிகாரிகள் தகவல்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 22,000 கன அடியாக அதிகரிப்பு - நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Aug 17, 2025 20:57 IST

    நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ.4.95 ஆக நிர்ணயம்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.4.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. சென்னையில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது,



  • Advertisment
  • Aug 17, 2025 18:57 IST

    குருவிக் கூட்டை எடுக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே குருவிக்கூட்டை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது 9 வயது மகன் சஞ்சய் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் வீட்டின் அருகே இன்று விளையாடிக்கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Aug 17, 2025 18:51 IST

    குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை

    இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கை அடுத்து அபாய ஒலி எழுப்பி குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை அவசர, அவசரமாக காவல்துறையினர் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Aug 17, 2025 18:50 IST

    கேஆர்எஸ் அணையிலிருந்து 50,000 கனஅடி வரை நீர் திறக்க வாய்ப்பு

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து 25,000 கனஅடி முதல் 50,000 கனஅடி வரை நீர் திறக்கப்பட வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி 50,000 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Aug 17, 2025 18:03 IST

    விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் தீப்பற்றிய கார்

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரில் விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு வந்துகொண்டிந்தனர். அப்போது முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. லாரி டிரைவர் திடீரென வாகனத்தை மெதுவாக இயக்கியதாக கூறப்படுகிறதும். இதன் காரணமாக பின்னால் வந்த இரண்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கார் ஒன்றில் திடீரென தீ மளமளவென எரியத்தொடங்கியது. இதனைக்கண்டவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காரில் இருந்த 4 பேரும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு காரை விட்டு இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.



  • Aug 17, 2025 18:00 IST

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

    தொடர் விடுமுறை முடிவடைந்ததையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் அரசு பஸ், தனியார் பஸ், கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களில் இன்று சென்னைக்கு திரும்பி வருகின்றனர். ஒரே நாளில் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வருவதால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



  • Aug 17, 2025 17:14 IST

    கபினி, கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

    காவிரி நீர் பிடிப்பு பகுகளில் தொடர் கனமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நாளை மாலைக்குள் விநாடிக்கு 45,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என ஒன்றிய நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.



  • Aug 17, 2025 17:01 IST

    மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 18,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



  • Aug 17, 2025 14:54 IST

    நீலகிரியில் டைடல் பூங்கா - டெண்டர் வெளியீடு

    நீலகிரி, குன்னுார், எடப்பள்ளி அருகே 8 ஏக்கரில் அமையவுள்ள டைடல் பூங்கா கட்டுமான பணிக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. டைடல் பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது



  • Aug 17, 2025 14:35 IST

    நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Aug 17, 2025 11:33 IST

    ராமநாதபுரம் ரயில்வே கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் 

    ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ரயில்வே கேட் நேற்று காலை ரயில் கடக்கும் போது மூடப்படாமல் இருந்த விவகாரத்தில், கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Aug 17, 2025 11:30 IST

    மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆக.18 முதல் போராட்டம் 

    மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆக. 18 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்துள்ளனர்.



  • Aug 17, 2025 10:27 IST

    ஏடிஎம் - யில் பணம் எடுக்கும்போது மின்சாரம் தாக்கி காயம்

    காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வெங்கடேசன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Aug 17, 2025 10:03 IST

    கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

    கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருவி இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.



  • Aug 17, 2025 10:00 IST

    3 முதல்வர்கள் திறந்து வைத்த திரையரங்கம் இடிப்பு

    கொடுமுடியில் கொடிகட்டி பறந்த கே.பி.எஸ். (கே.பி.சுந்தராம்பாளால் கட்டப்பட்ட) திரையரங்கம் இடிக்கப்பட்டது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 3பேரும் ஒன்றாக வந்து திறந்து வைத்த கே.பி.எஸ் திரையரங்கம் (கருணாநிதியும்,எம்ஜிஆரும் தியேட்டரை திறந்து வைக்க, ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றினார்)



  • Aug 17, 2025 09:18 IST

    சாலையில் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்து

    திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச் சாவடி அருகே சாலையில் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் இருந்த 9 பேர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் காரில் செல்லும் போது விபத்து நடந்துள்ளது.



  • Aug 17, 2025 09:14 IST

    திருச்செந்தூர் பக்தர்களுக்கு கால்முறிவு

    திருச்செந்தூர்கடலில்குளிக்கும்போதுஅலைஇழுத்துச் சென்று பாறைகளில் மோதி 10 பக்தர்களுக்கு எலும்பு முறிவுஏற்பட்டுள்ளது. கவனமாக கடலில் நீராட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்விடுமுறையைஒட்டிசாமிதரிசனத்திற்குபக்தர்கள்அதிகாலைமுதலேகுவிந்தனர்.



  • Aug 17, 2025 09:13 IST

    மேட்டூர் அணை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6223 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.25 அடியாகவும் நீர் இருப்பு 90.706 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 10,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: