Coimbatore, Madurai, Trichy LIVE News: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குரங்கு தொல்லை - நோயாளிகள் அதிருப்தி

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Monkey issue

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: அறுபடை வீடுகளில் 2 ஆவது படைவீடான திருச்செந்தூர் கோயிலில் நாளை காலை 6.15 முதல் 6.50 க்குள் புனித நீர் ஊற்றி கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

  • Jul 06, 2025 20:43 IST

    ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

    ஈரோட்டில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது, தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • Jul 06, 2025 19:57 IST

    நாகை அருகே விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நிர்முளை கிராமத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில்  மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்படி, இருசக்கர வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Advertisment
  • Jul 06, 2025 19:19 IST

    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குரங்கு தொல்லை - நோயாளிகள் அதிருப்தி

    திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குரங்கு தொல்லை அதிகரித்துள்ளதால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jul 06, 2025 18:45 IST

    7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jul 06, 2025 18:43 IST

     அஜித் சகோதரருக்கு காயம் எதுவும் இல்லை

    திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம், போலீசார் தாக்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த அஜித்குமார் சகோதரர் நவீன். நவீனுக்கு எக்ஸ்ரே எடுத்ததில் ரத்தக்கட்டு, காயம் எதுவும் இல்லை, பாத வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக 
    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தகவல்



  • Jul 06, 2025 18:42 IST

    எடப்பாடி பழனிசாமி அணியால் 10 இடங்களைக் கூட பிடிக்க முடியாது: புகழேந்தி

    "2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியால் 10 இடங்களைக் கூட பிடிக்க முடியாது"ஏன தஞ்சாவூரில் பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். நாளை முதல் பிரசாரத்தை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, தனது கொடியில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு அமித்ஷாவையோ மோடியையோ போட்டுக்கொள்ள வேண்டும். பிரசாரத்தில் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் கொள்கையை சொல்லப் போகிறாரா? அன்வர் ராஜா அமித்ஷாவுடன் கூட்டணி பேசும்போது எங்கே சென்றார்? இவ்வளவு நாட்கள் எங்கே சென்றார்? அன்வர் ராஜாவை தூண்டிவிட்டு பேச வைத்தது எடப்பாடி பழனிச்சாமிதான். திராவிட இயக்கத் தலைவர்களை அசிங்கப்படுத்திய அவமானப்படுத்திய கட்சிக்குப் பின்னால் செல்வது அசிங்கமாக இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Jul 06, 2025 18:04 IST

    திருவண்ணாமலையில் உயிரிழந்த சன்னியாசி விஸ்வநாதனின் உடலை கிரிவலப் பாதையில் முறைப்படி நல்லடக்கம்

    திருவண்ணாமலையில் உயிரிழந்த சன்னியாசி விஸ்வநாதனின் உடலை கிரிவலப் பாதையில் முறைப்படி நல்லடக்கம் செய்த சமூக சேவகர் மணிமாறன்.  தமிழ்நாட்டில் முதல் முறையாக தனது உடலை நல்லடக்கம் செய்ய பதிவுக் கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்து உயில் சாசனமாக மணிமாறனிடம் எழுதிக் கொடுத்துள்ளார். இதுவரை 3,336 சாது சன்னியாசிகளின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதாக சமூக சேவகர் மணிமாறன் பேட்டி.



  • Jul 06, 2025 16:59 IST

    மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு

    மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 50,000 கன அடியில் இருந்து 58,000 கன அடியாக இன்று மாலை 5 மணிக்கு அதிகரிக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல். அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,500 கன அடி வீதம் வெளியேற்றப்பட உள்ளது. 16 கண் மதகுகள் வழியாக 35,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • Jul 06, 2025 16:56 IST

    அதிமுக - பா.ஜ.க கூட்டணிஇயற்கைக்கு மாறானது: செல்வப்பெருந்தகை

    "அதிமுக - பா.ஜ.க கூட்டணி மக்கள் ஏற்றுக் கொள்ளாத கூட்டணி. இயற்கைக்கு மாறான கூட்டணி. அதிமுகவினர் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, பெரியார் பற்றி அவமரியாதை செய்து வரும் இவர்களை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தென்காசியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.



  • Jul 06, 2025 16:52 IST

    நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த இளைஞர் மரணம்

    நெல்லை: நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த சாம்ராஜ் (18) என்ற இளைஞர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் இளைஞரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். தச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.



  • Jul 06, 2025 15:44 IST

    அஜித் குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

    காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜீத் குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாக கூறியிருந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நவீன்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Jul 06, 2025 14:58 IST

    அஜித் குமார் வழக்கு தொடர்பாக விசாரணை அறிக்கை

    திருப்புவனத்தில் தனிப்படை போலீசாரால் இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், வரும் 8 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி ஜான் சுந்தர்லாஸ் சுரேஷ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.



  • Jul 06, 2025 14:19 IST

    அப்பாவுக்கு பதில் மகனை அழைத்துசென்ற காவலர்கள்

    அலங்காநல்லூரில் நகை விவகாரம் தொடர்பான புகாரில் தந்தைக்கு பதில் மகன்களை போலீசார்  அழைத்து சென்றனர். நீ வந்தால்தான் உன் அப்பா வருவார் எனக் கூறி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.



  • Jul 06, 2025 13:48 IST

    சூறாவளிக்காற்று வீசக்கூடும்

    தமிழகத்தில் ஜூலை 12 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூலை 8 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்  என  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Jul 06, 2025 13:47 IST

    மணிமாறன் வெட்டிக்கொலை - 3 பேர் சரண்

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கல் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் உள்பட 3 பேர் சரணடைந்தனர். பாமக நிர்வாகி பிரபாகரன் உள்பட 3 பேரிடமும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரனை மேற்கொண்டனர். 



  • Jul 06, 2025 13:46 IST

    திருச்செந்தூர் குடமுழுக்கு

    37 வருடங்களுக்குப் பிறகு திறக்கப்பட உள்ள ராஜகோபுரத்தின் மேற்கு வாசல் உட்பட, கோயிலின் பல பகுதிகளிலும் அலங்கார ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.



  • Jul 06, 2025 12:59 IST

    தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு

    சென்னையில் இருந்து 70 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • Jul 06, 2025 12:56 IST

    பூத் கமிட்டி வேலைகளை திமுக, அதிமுகவிடம் இருந்து பாஜக கற்க வேண்டும்" - வானதி சீனிவாசன்

    த் கமிட்டி அமைத்து வாக்கு சேகரிக்கும் நுட்பங்களை தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளிடம் இருந்து பா.ஜ.க கற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

    பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "பூத் கமிட்டி வேலையை தி.மு.க, அ.தி.மு.க-விடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்; வாக்கு சேகரிப்பதில் தி.மு.க, அ.தி.மு.க எப்போதும் பூத் மாஸ்டர்களாக உள்ளனர். அவர்களை தூக்கி சாப்பிட நாமும் பூத் மாஸ்டர்களாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 06, 2025 12:44 IST

    சாத்தூர் அருகே விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் 

    சாத்தூர் அருகே தாயில்பட்டியில் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து என  மாவட்ட வருவாய் அலுவலர் டிஆர்ஓ ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.



  • Jul 06, 2025 10:47 IST

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி; 4 பேர் காயம்

    சாத்தூர் அருகே தாயில்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Jul 06, 2025 10:23 IST

    ரூ.12 லட்சத்தில் டிரை புரூட் மாலை

    திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு 12 லட்ச ரூபாயில் பிரம்மாண்டமாக டிரை புரூட் மாலைகள் தயாராகி வருகின்றனர். 



  • Jul 06, 2025 10:23 IST

    "2 இடங்களில் மதியம் 1 மணி வரை மழை"

    நீலகிரி மற்றும் தென்காசியில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jul 06, 2025 10:22 IST

    சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 தொழிலாளர்கள் காயம் என தகவல்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ்த்தாயில்பட்டி பகுதியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் காயம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.



  • Jul 06, 2025 09:46 IST

     தஞ்சை கீழணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

     தஞ்சை கீழணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 1910 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. 



  • Jul 06, 2025 09:46 IST

    வைகை அணை நிலவரம்

    வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 1758 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 969 கன அடியாகவும் உள்ளது, நீர் இருப்பு 3.718 டி.எம்.சி. ஆக உள்ளது.



  • Jul 06, 2025 09:44 IST

    பட்டாசு ஆலை வெடிவிபத்து

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.  தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.



  • Jul 06, 2025 09:44 IST

    ஆர்.டி.ஓ , மனைவி சடலம் தண்டவாளத்தில் மீட்பு

    நாமக்கல் அருகே தண்டவாளத்தில் ஆர்.டி.ஓ சுப்பிரமணியன் அவரது மனைவி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. வகுரம்பட்டி தண்டவாளத்தில் நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்த  ஆர்.டி.ஓ சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி உடல் மீட்க்கப்பட்டது.



  • Jul 06, 2025 09:42 IST

    திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு

    அறுபடை வீடுகளில் 2 ஆவது படைவீடான திருச்செந்தூர் கோயிலில் நாளை காலை 6.15 முதல் 6.50 க்குள் புனித நீர் ஊற்றி கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: