Ponmudi | Dmk | சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் உயற்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திருக்கோவிலூர் தி.மு.க. சார்பில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
முன்னதாக, 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார்.
இந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 1.74 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, டிசம்பர் 21-ந் தேதி, பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 1ஆம் தேதி சட்டப்பேரவை செயலாளரிடம் இன்று பேசிய அ.தி.மு.க.வினர் சமீபததில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணியின் விளவங்காடு தொகுதி உடனயாக காலி தொகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடியின் திருக்கோலிலூர் தொகுதி மட்டும் காலி என்று அறிவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், திருக்கோவிலூர் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“