விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியில் வி.சி.க. நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சாத்தூருக்கு வந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்னும் 10 நாட்களுக்குள் வன்னிய இட ஒதுக்கீட்டை, சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி நிறைவேற்ற வேண்டும் என அன்புமணியின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய தலைமையை நிரூபிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாமகவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற உட்கட்சி குழப்பங்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளும் முயற்சியிலும் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். வன்னிய சமூகத்தின் சமூக நீதிக்காக குரல் கொடுப்பது வரவேற்கதக்கது.
தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டுவரும் காவல்துறையை சார்ந்தவர்கள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அதிகார அத்துமீறல்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை உள்ளிட்ட நால்வர்மிது வழக்குப்பதிவு குறித்த கேள்விக்கு, பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்து வீடியோ வெளியிட்ட இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தற்போது 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.