thirumavalavan | சென்னை டிஜிபி அலுவலகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இன்று (ஜன.22,2024) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “மத்திய பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்து அவர் பேசுகையில், “யோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது, ராமரின் பெயரால் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.
அயோத்தியில் அறங்கேறி இருப்பது ஆன்மிக விழா அல்ல; அரசியல் விழா. மோடி அரசு மத வெறி அரசியலில் ஈடுபட்டுவருகிறது.
10 ஆண்டுகால ஆட்சியில், பிரதமர் மோடி அரசு பேசுவது ஜெய்ஸ்ரீராம் தான்; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது, ராமரின் பெயரால் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “உழைக்கும் இந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு மோடி அரசு எதுவும் செய்யவில்லை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“