Advertisment

அரசியல் அரங்கில் அடுத்த திருப்பம்... ஒரே மேடையில் அமர போகும் திருமா - விஜய்

டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Thirumavalavan on Tamilaga Vettri Kazhagam conference and Vijay speech Tamil News

அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தனியார் வார இதழ் சார்பாக நடத்தப்படும் இந்த விழாவில், திருமாவளவன் மற்றும் விஜய் இருவரும் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக, புத்தகத்தை திருமாவளவன் வெளியிட, விஜய் அதனை பெற்றுக் கொள்கிறார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கைகள், கொள்கை தலைவர்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விஜய் விளக்கமளித்தார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்னும் கூற்றையும் விஜய் முன்மொழிந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு அளித்தனர். திருமாவளவன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தங்கள் கொள்கை தலைவர்களாக அம்பேத்கரை முன்னிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருமாவளவன் மற்றும் விஜய் இருவரும் ஒரே நிகழ்வில் பங்கேற்கவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thirumavalavan Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment