சமீப காலமாக சாதிப் படங்கள்... இமான் அண்ணாச்சி பேச்சுக்கு அதே மேடையில் பதில் கொடுத்த திருமாவளவன்!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சமூகத்தை பற்றிய படம் தற்போது வெளிவருவது தொடர்பாக இமான் அண்ணாச்சி பேசியதற்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சமூகத்தை பற்றிய படம் தற்போது வெளிவருவது தொடர்பாக இமான் அண்ணாச்சி பேசியதற்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இமான் அண்ணாச்சி பேச்சுக்கு அதே மேடையில் பதில் கொடுத்த திருமாவளவன்

இமான் அண்ணாச்சி பேச்சுக்கு அதே மேடையில் பதில் கொடுத்த திருமாவளவன்

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சமூகத்தை பற்றிய படம்  தற்போது வெளிவருவது தொடர்பாக இமான் அண்ணாச்சி பேசியதற்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

Advertisment

’புதுவேதம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இமான் அண்ணாச்சி பேசுகையில், ‘ சினிமாவை இரண்டு ரகமாக பிரித்து கொள்ளலாம். படத்தை பார்த்து மோசமான படம் என்று மக்கள் சொன்னால், அது வெற்றிகரமாக திரையரங்கில் ஓடும். இது தொடர்பாக பத்திரிக்கையில் எழுதுவார்கள். இந்த படம் தேருமா? தேராதா ? என்று பத்திரிக்கையில் எழுதுவார்கள். யுடியூப்பை திறந்தால் இதுபோன்ற வீடியோக்கள்தான் முதலில் வரும். படத்தை பற்றி நேர்மாறாக சொல்வது போல் வீடியோவின் டைட்டில் இருக்கும். உள்ளே சென்று பார்த்தால் படம் தொடர்பாக நல்ல கருத்துக்கள் இருக்கும்.

இப்போது புதிதாக ஒரு விஷயம் பிரபலமாகி வருகிறது. குறிப்பிட்ட சமூதாயத்தைப் பற்றி படம் எடுத்தால் அது பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போது படம் பார்த்துவிட்டு வரும், அனைவரும் இது எந்த சமூதாயத்தை சேர்ந்த படம் என்று கேட்கிறார்கள். நீங்க படம் எடுக்கவில்லையா டைரக்டெர் என்று கேட்டால், நான் குறிப்பிட்ட சமூதாயத்தைப் பற்றி படம் எடுத்திருக்கிறேன் என்று கூறுகிறார்கள். அது கீழ்தட்டா, மேல்தட்டா என்று கேட்கிறார்கள். தற்போது தட்டு தட்டாக படம் எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

 வெற்றிப்படத்தை கொடுத்த 3 பிரம்மாண்ட இயக்குநர்கள்  இங்கே உள்ளனர். அவர்கள் படங்களில் சாதிய வாடை இல்லை. அவர்கள் படம் எல்லாம் 100-க்கு மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடியது. இது போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

ஆனால் தற்போது ஒருக்கும் நிலையில் இருந்து, தமிழ் சினிமா வெளியே வர வேண்டும் என்று ஒரு காமெடியனாக, தமிழ் உணர்வாளனாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்” என்று கூறினார்.

இந்நிலையில் தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “ இமான் அண்ணாச்சி பேசும்போது, எல்லோரும்  இப்போது சமூதாயத்தை அடிப்படையாக வைத்து, மேல் தட்டு, கீழ்தட்டு என்ற அடிப்பையிலேயே திரைப்படங்களை எடுக்கிறார்கள் என்று அவர் வருத்தத்தைச் சொன்னார். அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்த திரைத்துறையில் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று எண்ணும் சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ராஜா விக்ரம் போன்றவர்களும் இருக்கிறார்கள். சாதி வேண்டாம், மதம் வேண்டாம் எல்லா உயிர்களை சமமாக மதிப்போம். திருவள்ளுவர் சொன்னதை நாம் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு பண்புகள் கொண்ட நபர்களும் திரைத்துறையில் இருக்கிறார்கள் “ என்று அவர் பேசினார்.  திரைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டாம். ஆனால் பிற்போக்கான கருத்தை உருவாக்கும் வகையில் படங்கள் எடுக்க கூடாது. ஆணவக் கொலை சரி என்று படம் எடுத்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட சமூகம் எந்த உடல் உழைப்பையும் செலுத்தாமல் வாழ முடியும் என்ற கருத்தியலுக்கு ஆதரவு தெரிவிக்கும் படங்கள்  எடுப்பது சரியில்லை. நான் எந்த குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி பேசவில்லை. இதைத்தான் இந்து சனாதனம்  கூறுகிறது. இதற்கு எதிராக செயல்படுவதுதான் இடதுசாரி கருத்தியல்” என்று அவர் கூறினார்.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: