/indian-express-tamil/media/media_files/2025/08/17/thiruma-birthday-2-2025-08-17-10-22-36.jpg)
“அனைவரும் கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் தொடர்ந்து சேர்ந்து நிற்போம்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். Photograph: (Image Source: x/ @mkstalin @ikamalhaasan)
“ஆழ்ந்த அறிவும் - தெளிவான சிந்தனையும் - உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், “அனைவரும் கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் தொடர்ந்து சேர்ந்து நிற்போம்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களும் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது 63-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆழ்ந்த அறிவும் - தெளிவான சிந்தனையும் - உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் - எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) August 17, 2025
இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட… pic.twitter.com/42ukJOSAho
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஆழ்ந்த அறிவும் - தெளிவான சிந்தனையும் - உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் - எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Warm birthday wishes to @thirumaofficial ji.
— Rahul Gandhi (@RahulGandhi) August 17, 2025
Together, we will continue to stand for dignity, equal rights, and empowerment of all.
அதில், “திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைவரும் கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் தொடர்ந்து சேர்ந்து நிற்போம்” என்று ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் வாழ்த்திய மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை எம்.பி-யுமான கமல்ஹாசன் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்… pic.twitter.com/mlEtPsHeiH
— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2025
“ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், என் உடன் பிறவாச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன்.” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.