/indian-express-tamil/media/media_files/2025/03/09/xwutCjF12YcXDt76sZuj.jpg)
Today Latest Live News Update in Tamil 17 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 17, 2025 20:32 IST
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தங்கர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- Aug 17, 2025 20:04 IST
பணி நிரந்தர கோரிக்கையை முன் வைக்க வேண்டாம் - ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்
தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை மீண்டும் ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகங்களை குலத்தொழிலுக்கே கொண்டு செல்லும். பணிநிரந்தரம் என்பது அடுத்த தலைமுறையில் குப்பை அள்ளுவதற்கான ஒரு சமூகம் இருக்க வேண்டும், என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. தூய்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒருபோதும் பணி நிரந்தரம் என்று கோரிக்கையை முன் வைக்க வேண்டாம். தூய்மை தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது அதை வரவேற்கிறோம். சுயமரியாதையுடன் வாழ்வதற்கு குலத்தொழிலில் இருந்து வெளியேறுவது சரியானதாகும்; பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை புறக்கணிப்போம் என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கூறியுள்ளார்.
- Aug 17, 2025 20:00 IST
டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்
டெல்லி, பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது. குடியரசு துணைத்தலைவர் தேர்தல் தொடர்பாக அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் ஆலோசனை
- Aug 17, 2025 19:40 IST
'0' முகவரியில் இருப்பவர்கள் யார்? - தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
"பாலங்களுக்கு அடியே தங்கியிருப்போர், தெருவிளக்குகளின் கீழ் தங்கியிருப்போர், நகரின் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் தங்கியிருப்போர் ஆகியோருக்கும் வாக்காளர் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கே ‘0' என முகவரி இருக்கும். வாக்களிப்பதற்கு முகவரி தேவை இல்லை அப்படிப்பட்டவர்களை போலி வாக்காளர்கள் என்று முத்திரை குத்தினால், அது நமது ஏழை வாக்காளர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.
- Aug 17, 2025 19:19 IST
சென்னை புறநகரில் கனமழை
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
- Aug 17, 2025 18:57 IST
திருமா சிற்றன்னை உடலுக்கு 4 அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
உடல்நலக்குறைவால் உயிரிழந்த விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை செல்லம்மாள் உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு மற்றும் சி.வெ.கணேசன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
- Aug 17, 2025 18:51 IST
கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி கோர விபத்து; 7 பேர் பலி
குஜராத் மாநிலம் சுரேந்திநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாலை 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. இதில் ஒரு காரில் 7 பேரும் மற்றொரு காரில் 3 பேரும் பணித்தனர். டிடாரா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இரு கார்களும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் 2 கார்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவத்தில் ஒரு காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். மற்றொரு காரில் பயணித்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.
- Aug 17, 2025 18:05 IST
இந்தியாவில் இ-சிம் சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல்.
சிம் கார்டு இல்லாமல் தொலைத்தொடர்பு சேவை பெறும் இ-சிம் (eSIM) சேவையை முதல்முறையாக தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தொடங்கி உள்ளது. படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஏற்கனவே இ-சிம் சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
- Aug 17, 2025 17:45 IST
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் கிரவுன் ஹைட்ஸ் நகரில் பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று அதிகாலை 3.30 (அந்நாட்டு நேரப்படி) 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். அந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 17, 2025 17:14 IST
தீபாவளி; ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்டோபர் 17-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரையிலான டிக்கெட்டுக்களை நாளை முதல் புக்கிங் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
- Aug 17, 2025 17:13 IST
’மோடி அரசின் ஏஜெண்டுபோல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது’
பீகாரின் சசாராம் மாவட்டத்தில் வாக்காளர் உரிமை யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய கார்கே, பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கும்வரை மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பில்லை. மேலும், அரசியலமைப்பு சாசனத்திற்கு ஆபத்து உள்ளது. வாக்களிக்கும் உரிமையை பறிக்க பாஜக முயற்சிக்கிறது. மோடி அரசின் ஏஜெண்டுபோல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
- Aug 17, 2025 17:08 IST
’பொய் குற்றச்சாட்டுகளைக் கண்டு தேர்தல் ஆணையம் பயப்படாது’
வாக்காளர்களை குறிவைத்து, தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். பொய் குற்றச்சாட்டுகளைக் கண்டு மக்கள் அஞ்சமாட்டார்கள். தேர்தல் ஆணையமும் பயப்படாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்
- Aug 17, 2025 17:03 IST
சாலையில் திடீர் பள்ளம் - வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு
சென்னை அடுத்த அம்பத்தூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இருசக்கர வாகனம், பின்னால் வந்த லாரியும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டியை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். லோடு வாகனத்தின் ஒரு பக்க சக்கரம் பள்ளத்தில் சிக்கித் தொங்கியது.
- Aug 17, 2025 16:52 IST
அரசியல் கட்சிகள் குழப்பதை உருவாக்கி வருகின்றன - தேர்தல் ஆணையர்
யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அரசியலமைப்பு கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்காது. தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற வேறுபாடு எதுவும் கிடையாது, அனைவரும் சமம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வெளிப்படையான முறையில் பணியாற்றுகின்றனர். பீகாரின் ஏழு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் நிற்கின்றனர். பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றியடைய அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக கோரி வந்தன. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை சில அரசியல் கட்சிகள் குழப்பதை உருவாக்கி வருகின்றன என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்
- Aug 17, 2025 16:39 IST
எங்களிடம் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என பாகுபாடு இல்லை - தேர்தல் ஆணையர் விளக்கம்
எங்களிடம் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என பாகுபாடு இல்லை என ராகுல் காந்திக்கு புகாருக்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்
- Aug 17, 2025 16:38 IST
இன்று நடந்தது பா.ம.க பொதுக்குழு கூட்டம் அல்ல – பா.ம.க செய்தி தொடர்பாளர் பாலு அறிக்கை
புதுச்சேரி பட்டானூரில் இன்று நடத்தப்பட்ட கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாமகவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என பா.ம.க செய்தி தொடர்பாளர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Aug 17, 2025 16:15 IST
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்வரை போராட்டம் - ராமதாஸ்
மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்வரை போராடாமல் விடப்போவதில்லை என பா.ம.க பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியுள்ளார்
- Aug 17, 2025 16:12 IST
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமம் - தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமம். எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் பேட்டி அளித்தார்
- Aug 17, 2025 16:08 IST
தமிழகத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு - எல். முருகன்
நடப்பு நிதியாண்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.800 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு இணையாக எழும்பூர் ரயில் நிலைய பணிகள் நடைபெறுகின்றன என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
- Aug 17, 2025 15:51 IST
அக்டோபர் 1 முதல் யு.பி.ஐ சேவையில் “கலெக்ட் ரெக்விஸ்ட்” வசதி நிறுத்தம்
யு.பி.ஐ (UPI) சேவையில் அக்டோபர் 1 முதல் கலெக்ட் ரெக்விஸ்ட் (Collect Request) வசதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலி கலெக்ட் ரெக்விஸ்ட்கள் மூலம் பண மோசடி நடைபெறுவதை தடுக்க இந்த வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது என தேசிய கட்டண கழகம் அறிவித்துள்ளது
- Aug 17, 2025 15:48 IST
கருணாநிதிக்கு ராமதாஸ் புகழாரம்
எனது நண்பர் கருணாநிதி 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார், 115 சமுதாய மக்கள் பயன்பெற்றனர் என பொதுக்குழுவில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
- Aug 17, 2025 15:12 IST
காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல – பா.ம.க பொதுக்குழுவில் ராமதாஸ் பேச்சு
வரலாற்று சிறப்புமிக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 36 தீர்மானங்கள் பா.ம.க.,விற்கு மட்டுமானதல்ல, தமிழக மக்களுக்கானது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்துமே நீங்கள் தான். தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராடினேன் என பா.ம.க பொதுக்குழுவில் நிறுவனர் ராமதாஸ் பேசினார்
- Aug 17, 2025 14:57 IST
24 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- Aug 17, 2025 14:29 IST
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆந்திரா - ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். ஆகஸ்ட் 19 அன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேச பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- Aug 17, 2025 14:24 IST
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்; ராமதாஸ் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை
16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க, பா.ம.க நிறுவனர் ராமதாஸ்-க்கு, 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது
- Aug 17, 2025 14:21 IST
காங்கிரஸின் வாக்காளர் அதிகார யாத்திரை தொடக்கம்
வாக்குத்திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் வகையில் காங்கிரஸின் வாக்காளர் அதிகார யாத்திரை பீகாரில் தொடங்கியது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆர்ஜேடி தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
- Aug 17, 2025 13:52 IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிக்கும் என ஒன்றிய நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- Aug 17, 2025 13:15 IST
பொதுக்குழுவில் பா.ம.க ஒருங்கிணைப்புக் குழு அன்புமணிக்கு கண்டனம்
விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அன்புமணி மைக்கை தூக்கிப் போட்டது, பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கியதாக அழைத்தது, கைப்பேசி எண் கொடுத்ததெல்லாம் தலைமைக்கு கட்டுப்படாத செயல். தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அவர்களை வராமல் தடுத்ததும் தவறான செயல். ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததும் ஐயாவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என வேண்டியதும் கட்சியை அவமதிக்கும் செயல். அனுமதி பெறாம நடைபயணம் மேற்கொள்வது கபட நாடகமே” என பா.ம.க ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி அடுக்கடுக்காக குற்றம்சாட்டியுள்ளார்.
- Aug 17, 2025 13:09 IST
பா.ம.க பொதுக்குழுவில் கட்சி விதிகளை மாற்றிய டாக்டர் ராமதாஸ்
பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்ற விதியில் திருத்தம் செய்டு பா.ம.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ம.க நிறுவனரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல், அவர் முன்னிலையில் பொதுக்குழு என கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- Aug 17, 2025 12:33 IST
பொதுக்குழுவில் பா.ம.க தலைவராக டாக்டர் ராமதாஸ் மீண்டும் தேர்வு; 37 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் மருத்துவர் ராமதாஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 17, 2025 12:09 IST
‘கேள்வி கேட்டால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும்... பயப்படுகிறார் திருமாவளவன்’ - எல். முருகன் குற்றச்சாட்டு
மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க.வை கேள்வி கேட்டால், கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என திருமாவளவன் பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
- Aug 17, 2025 12:07 IST
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு: 7 பேர் பலி... மீட்பு பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் கிப்ட்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்புக்கு பிறகு, கதுவா மாவட்டத்தில் மற்றொரு மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் கதுவா மாவட்டத்தில் உள்ள ராஜ்பாக் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணியில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கதுவாவில் நிலைமையை நேரடியாக ஆய்வு செய்தார்.
- Aug 17, 2025 11:55 IST
டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க பொதுக்குழு கூட்டம் தொடக்கம்
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம், பட்டனூரில் தொடங்கியது. பொதுக்குழுவில் அக்கட்சித் தொண்டர்கள், ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; அய்யாவின் முடிவே இறுதியானது’ என்ற வாசகம் இடம்பெற்ற பதாகையை ஏந்தியுள்ளனர்.
- Aug 17, 2025 11:36 IST
தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Aug 17, 2025 10:59 IST
‘ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான்; தமிழ்நாட்டில் இல்லை’ - ஸ்டாலின் காட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திராவிட மாடல் அரசுதான் இந்தியாவுக்கான திசைகாட்டி. ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர். தி.மு.க ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி, திராவிடத்தை பழிப்பார் ஆளுநர் ரவி. நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதால் ஆளுநர் எரிச்சலில் கொட்டித் தீர்க்கிறார். ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் தரமாட்டார்; இல்லாத திருக்குறளை எழுதி கொடுப்பார்; ஆளுநர் மூலம் தனது இழிவான அரசியலை ஒன்றிய பா.ஜ.க அரசு செய்து வருகிறது. ஆளுநர் அவர்களே, நீங்கள் கம்பு சுத்த வேண்டியது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான். தமிழ்நாட்டில் இல்லை. அங்கே போய் கம்பு சுத்துங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம்தான் முதலில் உள்ளது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
- Aug 17, 2025 10:25 IST
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் - முதல்வர்
விவசாயிகள் பயிர்க்கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த அன்றே கடன் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- Aug 17, 2025 09:52 IST
தி.மு.கவின் பாவ மூட்டைகளை திருமா சுமக்க வேண்டாம் எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்
திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்கொடுத்துள்ளார். பாவம்திருமாவளவன்சேரக்கூடாதஇடத்தில்சேர்ந்துவிட்டதாகவும்கூறினார்.
- Aug 17, 2025 09:41 IST
டிரம்பின் மனைவி புதினுக்கு கடிதம்
ரஷ்யா - உக்ரைன் போரால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை குறித்து அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா, புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார். "குழந்தைகளின் வாழ்க்கை, அரசியல் தத்துவத்தை விட மேலானது உக்ரைனில் ஆபத்திலிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பை கனவு காண்கிறார்கள்" என்று மெலனியா டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- Aug 17, 2025 09:39 IST
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள்
முன்னாள்ஒன்றியஅமைச்சர்முரசொலிமாறன்பிறந்தநாளைஒர்ட்டிதருமபுரியில்அவரதுஉருவப்படத்திற்குஸ்டாலின்மரியாதைசெய்தார்.
- Aug 17, 2025 09:19 IST
அன்புமணியை நீக்க தீர்மானம்?
இன்று நடைபெற உள்ள ராமதாஸ் தலைமையிலான பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியை விட்டு அன்புமணியை நீக்க தீர்மானம் கொண்டு வர முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 17, 2025 08:54 IST
காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்
ஆடி மாதம் முடிந்த கையோடு காசிமேட்டில் மீன் வாங்கக் குவிந்த சென்னை மக்கள். கடந்த வாரம் வஞ்சிரம் மீன் ரூ1,800 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.1,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 17, 2025 08:31 IST
தவெக மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைப்பு
தமிழகவெற்றிக்கழகத்தின் 2 ஆவதுமாநாட்டுக்காககுடிநீர்மேலாணமைக்குழுஅமைக்கப்பட்டுள்ளது. மதுரைபாரபத்தியில் 21 ஆம்தேதிநடைபெறும்மாநாட்டில்குடிநீர்பராமரிப்புபணிகளைமேற்கொள்ளகுழுஅமைக்கப்பட்டுள்ளது.
- Aug 17, 2025 08:29 IST
மேட்டூர் அணை நீர் நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6223 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.25 அடியாகவும் நீர் இருப்பு 90.706 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 10,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- Aug 17, 2025 08:26 IST
ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்ட நபர்
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வந்த மின்சார ரயிலில், 3 வயது குழந்தையை கீழே இறக்கி விட்டுவிட்டு சென்ற நபர். என்ன செய்வதென்று தெரியாமல் ரயில் நிலையத்தில் பரிதவித்த குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிசிடிவி அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- Aug 17, 2025 08:02 IST
2047க்குள் ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி - தகவல்
அடுத்து வர உள்ள ஜி.எஸ்.டி சீர்திருத்தம் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும். 2047ஆம் ஆண்டுக்குள் ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
- Aug 17, 2025 08:00 IST
"திமுக கூட்டணியை உடைக்க இபிஎஸ் சதி"
திமுக கூட்டணியை உடைக்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சதி செய்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
- Aug 17, 2025 08:00 IST
"திருமாவுக்கு நெருக்கடி"
திமுக கொடுத்த நெருக்கடியால் மது ஒழிப்பு மாநாட்டை போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு என திருமாவளவன் பெயர் மாற்றியதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
- Aug 17, 2025 07:58 IST
தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது
தீபாவளிபண்டிகைவரும்அக்டோபர் 20 ஆம்தேதிகொண்டாடப்படஉள்ளநிலையில்அந்ததொடர்விடுமுறைக்கானரயில்டிக்கெட்முன்பதிவுதொடங்கியது. அக்டோபர் 16யில்ஊர்செல்வோர்இன்றுமுன்பதிவுசெய்யலாம். ரயில்நிலையகவுண்டர்களில்காலை 8 மணிமுதல்அனைத்துவகுப்புகளுக்கும்முன்பதிவுநடக்கிறது.
- Aug 17, 2025 07:30 IST
விண்வெளி நாயகன் சுபன்ஷூ சுக்லா இந்தியா வருகை
ஆக்ஸியம்-4 விண்வெளி பயணத்தின் பைலட் சுபன்ஷு சுக்லா, ஜீலை 15ல் பூமிக்கு திரும்பிய நிலையில் இந்தியா வருகைத்தந்தார். மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் சுபன்ஷு சுக்லாவை வரவேற்றனர்.
- Aug 17, 2025 07:29 IST
பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியது ஸ்விக்கி நிறுவனம்
ஸ்விக்கிஉணவுடெலிவரிபயன்பாட்டுக்கட்டணம்ரூ.12 இருந்தநிலையில்தற்போதுரூ.14 ஆகஉயர்ந்துள்ளது. பண்டிகைக்காலங்களில்பரிவர்த்தனைகளின்அளவுஅதிகரித்ததேஇந்தகட்டணஉயர்வுக்குகாரணம்எனஸ்விக்கிநிறுவனம்தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.