நேற்று சென்னையில் நடைபெற்ற வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழாவில், போதைப்பொருளால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் அரங்கில் நேற்று மாலை 3 மணி அளவில் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனின் 62 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதில் பேசிய திருமாவளவன் “ ஒரு இளைஞன் போதைக்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் ஆற்றல் வாய்ந்த ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ, பொறியாளராகவோ, மருந்துவராகவோ வளர முடியும். ஆனால், அப்படி ஆக முடியாத அளவிற்கு ஒவ்வொரு கிராமத்திலும் 100-க்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் உள்பட 13 முதல் 19ம் வயதில் இருக்க கூடிய பதின்ம வயதினர் பலர் மது போன்ற போதைப்பழகத்திற்கு அடிமையாகிறாரக்ள்.
கஞ்சா, புகையிலை, பான்பராக், கொக்கைன், ஹெராயின், மதுபானம் என பல வகையான போதைப்பொருட்களுக்கு தற்போது சரளமாக புழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெளிப்படையாக வியாபாரம் செய்யப்படுகிறது.
கிராமபுரத்தில் 100 பேரில் 20 பேர் போதைக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். இது குடும்பத்தை மட்டும் பாதிக்கவில்லை ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் போல, பெரியார் போல போராளிகள் வளர வாய்ப்புள்ளது. ஆனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி 40 வயதிற்குள் இறந்துவிடுகிறார்கள். சாதியை ஒழிக்க முடியுமா ? ஊழலை ஒழிக்க முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதால் பதில் வரும். ஆனால், அதை ஒழிப்பதற்க்கான முன்னெடுக்கப்பட்டுதான் வருகிறது.
போதையில் இருந்து மக்களை காப்பற்றா இதுபோன்ற விழிப்புணர்வூட்டும் பரப்புரைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது” என்று பேசி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“