/indian-express-tamil/media/media_files/2025/10/08/thirumavalavan-car-accident-vck-attack-chennai-thirumavalavan-car-collision-2025-10-08-09-50-06.jpeg)
Thirumavalavan car accident VCK attack Chennai Thirumavalavan car collision
சென்னை உயர்நீதிமன்ற வளாகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்ற கார், முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வக்கீலின் ஸ்கூட்டர் மீது மோதியதாகத் தெரிகிறது. அப்போது, ஸ்கூட்டரில் சென்ற வக்கீல், திருமாவளவனின் கார் ஓட்டுநரிடம் ஆவேசமாகக் கேள்வி கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனிடையே நடுரோட்டில் நடந்த இந்த தாக்குதல் தொடர்பாக, பாதிக்கப்பட்ட வழக்கறிஞரின் சகோதரி அளித்திருக்கும் பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"யூடியூப் -ல் பார்த்துதான் ஓடிவந்தேன்"
சம்பவம் குறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய வழக்கறிஞரின் சகோதரி, தான் சம்பவ இடத்தில் இல்லை என்றும், ஊடகங்கள் மூலம் அறிந்தே ஓடிவந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். "எனக்கு உடல்நிலை சரியில்லாததால், புது ஐடி கார்டு வாங்குவதற்காகத்தான் என் தம்பி சென்றான். ஆனால், என் தம்பி தாக்கப்பட்டதும்நான் யூடியூப்-ல் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது.
ஒரு ஐடி கார்டு வாங்கிட்டுப் போன அட்வகேட்டுக்கே இந்த நிலைமைன்னா, மக்களுக்கு என்ன நிலைமைன்னு எனக்குத் தெரியல. அவனை அடித்துப் போட்டிருக்கிறார்கள். நான் யூடியூப்-ல் பார்த்துதான் ஓடி வந்தேன். உடனே ஸ்டேஷனுக்குப் போய் போலீஸிடம் பேசியும், எந்த நடவடிக்கையும் எடுக்கல" என்று குற்றம் சாட்டினார்.
தாக்குதலுக்குப் பிறகு தனது தம்பியின் நிலை குறித்துப் பேசிய அவர், "என் தம்பி தரையில் சடலம் மாதிரி மயக்கமடைந்து கீழே கிடக்கிறான். அவனைத் தூக்கப் போனாலும், 'அவர் ஆக்டிங் பண்றாரு, நீங்க வெயிட் பண்ணுங்க' என்று விசிக-வினர் சொன்னார்கள் . எங்களைக் கிட்டக்கூடப் போக விடாமல், அப்படியே தனியாக வைத்திருக்கிறார்கள். ஹாஸ்பிட்டலில் போலீஸ் வந்து, எமர்ஜென்சி வார்டுக்குள்ள கூட எங்களை உள்ள விடல. தனியாகத்தான் அவரைக் கூட்டிட்டுப் போறாங்க. யாரும் உள்ள போகக் கூடாதுன்னு சொல்றாங்க" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
வழக்கறிஞரின் உடல்நிலை குறித்துக் கேட்டபோது, "ரொம்ப சீரியஸ் ஆன நிலைமையில்தான் இருக்குன்னு சொல்லி சொல்றாங்க. தலையில அடிச்சிருக்காங்க. பயங்கரமா அடிச்சிருக்காங்க. பைக்கையும் தள்ளிருக்காங்க” என்று கண்கலங்கினார்.
இதனிடையா சாலை விபத்தில் வழக்கறிஞரை திருமாவளவன் தரப்பு ஆட்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.