/indian-express-tamil/media/media_files/2025/10/08/tirma-explan-2025-10-08-09-54-37.jpg)
'பிரச்னை செய்தது அந்த தம்பி தான்... என் கார் மோதவில்லை': திருமாவளவன் விளக்கம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் கிஷோர் என்பவரை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டார்.
அப்போது சென்னை பாரிமுனை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது வழக்கறிஞர் ஒருவரின் பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால் வி.சி.கவினர் ஒன்றுகூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில், வி.சி.க குண்டர்கள் ஒரு வழக்கறிஞரை தாக்கியதாகக் கூறப்படுகிறது, அவர் ஒரு கார் ஓட்டுநரை மோதியதாகக் கேள்வி கேட்டதற்காக. குறிப்பாக, காரில் வி.சி.க தலைவர் திருமாளவன் இருந்தார்.
In a shocking display of hooliganism in broad daylight, VCK goons allegedly assaulted a lawyer, simply for questioning a car driver who had hit him. The car, notably, was carrying VCK leader Thiru @thirumaofficial.
— K.Annamalai (@annamalai_k) October 7, 2025
Ironically, what makes it worse is that Thiru @thirumaofficial… pic.twitter.com/ZOk8fm9gm9
முரண்பாடாக, திருமாவளவன் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு போராட்டத்தில் இருந்து திரும்பி வந்தார், ஆனால் அவரது சொந்தப் பரிவாரங்கள் சிறிது நேரத்திலேயே ஒரு வழக்கறிஞரைத் தாக்கினர்” என்று கூறியுள்ளார்.
தாக்குதல் குற்றச்சாட்டு குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில், என் வண்டி மோதவில்லை... அவர் என் வாகனத்திற்கு முன்னால் மெதுவாக வேண்டுமென்றே சென்றார். என் கார் முன்பாக, இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இளைஞர் என்னைப் பார்த்துக் கொண்டுதான் சென்றார்."
வழக்கமாக முன்னே செல்லும் எஸ்காட் வாகனம் நேற்று என் காருக்குப் பின்னால் வந்தது. என் காருடன் வந்த அந்த இளைஞர், திடீரென வண்டியை நிறுத்தினார். முறைத்துக்கொண்டே காரை நோக்கி வந்தார். ஏதோ சத்தம் போட்டார். வண்டியில் நான் அமர்ந்து இருக்கிறேன் என்று தெரிந்தும், வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தார்.
வண்டியை மேற்கொண்டு செலுத்த முடியாதவாறு, தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, என் வண்டியை நோக்கி, கைகளை ஓங்கி அசைத்துக்கொண்டே வந்தார். இந்நிலையில்தான், வி.சி.க.வினரில் ஓரிருவர், அவர் மீது கையால் ஓங்கி அடிக்க முயன்றனர். பின்னர், போலீஸார் அவரைத் தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தை ஊடகங்கள் ஊதிப் பெருக்கி, திட்டமிட்ட தாக்குதல்போல அவதூறு பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். அண்ணாமலை போன்றோர் இதற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக, உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞரைக் கைது செய்ய வலியுறுத்தி மாவட்டந்தோறும் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.