/indian-express-tamil/media/media_files/9rQicmNe1hjnnYQfXD2V.jpg)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் மாரடைப்பால் மரணம்; திருமாவளவன் இரங்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கட்சியின் முதன்மை செயலாளர் தோழர் உஞ்சைஅரசன் அவர்கள் காலை 10.17 மணியளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த அக்டோபர் -02 அன்று மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வார காலமாக சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு இன்று இதயம் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரது உடல் கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் நண்பகல் 12.00 மணியிலிருந்து 4.00 மணி வரையில் வைக்கப்படும். அங்கே அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்படும். அதன் பின்னர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அவரது சொந்த ஊரான உஞ்சை விடுதிக்குக் கொண்டு செல்லப்படும்.
நாளை (அக்டோபர் 25 ) மாலை அங்கே அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தி அவ்வூரிலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிவிப்பு
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 24, 2023
---------------------
கட்சியின் முதன்மை செயலாளர்
தோழர் உஞ்சைஅரசன் அவர்கள் காலை 10.17 மணியளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த அக்டோபர் -02 அன்று மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வார காலமாக சிகிச்சைப் பெற்று வந்த… pic.twitter.com/y8fhGiardi
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.