Thiruvannamalai | Tamil Nadu Congress | தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே கக்கன், இளையபெருமாள் உள்ளிட்ட பட்டியலினத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் தலைவர்களாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சரியாக 45 ஆண்டுகள கழித்து செல்வ பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்தவர் ஆவார்.
இந்த நிலையில் தலித்திய செயல்பாடுகள் காரணமாக அந்தப் பணியில் இருந்து விலகி, சமூக பணிகள் செய்துவந்தார். தொடர்ந்து, புரட்சிப் பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார்.
இந்த நிலையில், தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து 2006ல் கடலூரில் உள்ள ஒரு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் விசிகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தார்.
இந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். தற்போது, அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனினும், தொல். திருமாவளவன் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற கூறப்பட்டது. இந்த நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தொல். திருமாவளவன் வாழ்த்துச் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “காங்கிரஸின் புதிய தலைவர் செல்வபெருந்தகையை சகோதரர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“