/indian-express-tamil/media/media_files/3PUaTfgg41xl3g8kDeX3.jpg)
Thol Thirumavalavan
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் வேறு சாதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் லாபத்துக்காக அறிவித்ததால்தான், சட்டப்படியான சிக்கலை அது சந்தித்தது.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. மாயாவதி உத்தரபிரதேச முதல்வரானது ஒரு விதிவிலக்கு.
தி.மு.க., அரசு மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திமுக அரசு நிலையானது அல்ல. மாநில அரசுதான் நிலையானது. எந்த சூழலிலும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் நிலை இங்கே இல்லை’, என்றார்.
திருமாவளவனில் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மறுபுறம் சீமான், கார்த்தி சிதம்பரம் எம்.பி., உள்ளிட்டோர் திருமாவளவன் கூறியதை வரவேற்றனர்.
இந்நிலையில், ஈரோட்டில் குடிஅரசு சுயமரியாதை இயக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், ‘தலித்துக்கள் முதல்வராக முடியாது என வேட்கையிலோ, இயலாமையிலோ நான் கூறவில்லை. இன்றைக்கு சாதிய கட்டமைப்பு வலுவாக உள்ளதால் அப்படி கூறினேன்.
சாதிய கட்டமைப்பை தாக்கும் சூழல் இன்னும் கணியவில்லை. அதை தகர்க்க தயாராக வேண்டும் என்றே கூறினேன். தலித்துகள் முதலமைச்சராக வரமுடியாது என்ற சாதிய கட்டமைப்பு இங்கே உள்ளது.
எஸ்.சி., எஸ்.டி.யை சேர்ந்தவர் குடியரசுத் தலைவர் ஆக முடியும், ஆனால் பிரதமராக முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
திருமாவளவன் பேசிய வீடியோ
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற குடிஅரசு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்துகொண்டு ஆற்றிய உரை... pic.twitter.com/LxCmCTfYNR
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 25, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.