scorecardresearch

காயத்ரி ரகுராம் என்னை சந்திக்க இதுதான் காரணம்: திருமாவளவன்

இந்நிலையில் இந்த சந்திப்பு மரியாதை ரீதியான சந்திப்பு என்று டாக்டர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம் என்னை சந்திக்க இதுதான் காரணம்: திருமாவளவன்

தமிழ்க பாஜக கட்சியிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம், விசிக கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். இந்நிலையில் இந்த சந்திப்பு மரியாதை ரீதியான சந்திப்பு என்று டாக்டர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக கட்சியில் செயல்பட்டு வந்த காயத்ரி ரகுராம், தமிழக பாஜகவின் சிறுபான்மையினர்  தலைவர் டெய்சியை சூர்ய சிவா தகாத வார்த்தைகளால் பேசும் ஆடியோவை பதிவு செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறாமல், காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து அண்ணாமலை நீக்கினார். மேலும் திருச்சி சூர்யா மற்றும் டெய்சி இருவரும் அண்ணா- தம்பி போல் பேசி ஒன்றாகிவிட்டோம் என்று இருவரும் கூறினார்கள். இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக சூர்ய சிவா தெரிவித்தார். ஆனால் அவரின் ராஜினாமவை தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து ட்வீட் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் விசிக கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். ”என்ன மிஸ்டர் திருமாவளவன் “ என்று ஒரு பொதுக்கூட்டத்தில் காயத்ரி ரகுராம் திருமாவளவனை மோசமாக பேசியது குறுப்பிடதக்கது.

இந்நிலையில் இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில் “ அம்பேத்கர் திடலுக்கு காயத்ரி ரகுராம் வருகை தந்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவரே சமூக ஊடங்களில் பதிவு செய்திருக்கிறார். விசிக-வில் இணைவதற்கோ அல்லது அவருக்கு பாதுகாப்பு வேண்டியோ என்னை சந்திக்க வரவில்லை. அரசியல் சூழலில் அவர் சந்தித்த பிரச்சனையின்போது அவருக்கு ஆதரவாக பேசிய அனைவரையும் அவர் சந்தித்து வருவதாகவும், இதனால் எனகுக்கும் அவர் நன்றி தெரிவிக்க வந்ததாகவும் என்னிடம் சொன்னர்” என்று அவர் கூறினார்.    

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thirumavalavan explains why gayathri raghuram met him

Best of Express