தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது, அதில் இருக்கும் `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழக கட்சியினரிடையே விமர்சனத்துக்குள்ளானது. சம்பவம் தொடர்பாக சிலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனிடையே, கவனச்சிதறல் காரணமாக அந்த வரி தவறவிடப்பட்டதாக விழாவை நடத்தியவர்கள் சார்பில் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தான் ஆட்சிக்கு வந்தால் தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நீக்கி விடுவேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீமானின் இந்த கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முற்றிலும் நீக்கி விடுவேன் என சீமான் சொல்லவில்லை என்றும், அதற்கு பதிலாக சிறப்பான பாடல் ஒன்றை நடைமுறைப்படுத்துவேன் என்றும் சீமான் கூறியிருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
மேலும் பேசிய அவர், திராவிட அரசியல் மீது சீமானுக்கு எதிர்ப்பு உணர்ச்சி இருக்கும் காரணத்தால், இந்தக் கருத்தை அவர் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திராவிடம் மற்றும் தமிழினம் குறித்த தனது விளக்கத்தையும் திருமாவளவன் கூறியுள்ளார்.
அதன்படி, திராவிடம் என்பது மரபினம் எனக் குறிப்பிட்ட அவர், அதற்குள் இருக்கும் தேசிய இனங்களில் தமிழும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார். இதனை வெவ்வேறாக பிரித்து பார்க்க வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டிய அவர் திராவிடத்தை பாதுகாப்போம் என்று கூறினாலே, தமிழ் மற்றும் தமிழர்களை பாதுகாப்போம் என்று தான் பொருள் எனக் கூறியுள்ளார். மேலும், பெரியார் மற்றும் திராவிட கட்சிகளுக்கு முன்பே திராவிடம் என்ற சொல்லை பண்டிதர் அயோத்திதாசர் பயன்படுத்தியதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
முன்னதாக, திருமாவளவனால் முதலமைச்சராக முடியாது எனவும் அவருக்கு அதற்காகன தகுதி இல்லையெனவும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியதற்கு, சீமான் கடும் எதிர்வினை ஆற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முதலமைச்சர் ஆகும் அனைத்து தகுதிகளும் திருமாவளவனுக்கு இருப்பதாக கூறிய சீமான், திருமாவை ஆதரித்து எப்படியாவது முதலமைச்சர் ஆக்குவோம் எனக் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
திராவிடம் vs தமிழினம்: 'சீமான் அப்படி சொல்லவில்லை': திருமா புது விளக்கம்
தான் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முற்றிலும் நீக்கிவிடுவேன் என சீமான் கூறவில்லை எனவும், அதற்கு பதிலாக மற்றொரு சிறப்பான பாடலை நடைமுறைப்படுத்துவதாக சீமான் கூறியிருப்பதாகவும் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
Follow Us
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது, அதில் இருக்கும் `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழக கட்சியினரிடையே விமர்சனத்துக்குள்ளானது. சம்பவம் தொடர்பாக சிலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனிடையே, கவனச்சிதறல் காரணமாக அந்த வரி தவறவிடப்பட்டதாக விழாவை நடத்தியவர்கள் சார்பில் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தான் ஆட்சிக்கு வந்தால் தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நீக்கி விடுவேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீமானின் இந்த கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முற்றிலும் நீக்கி விடுவேன் என சீமான் சொல்லவில்லை என்றும், அதற்கு பதிலாக சிறப்பான பாடல் ஒன்றை நடைமுறைப்படுத்துவேன் என்றும் சீமான் கூறியிருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
மேலும் பேசிய அவர், திராவிட அரசியல் மீது சீமானுக்கு எதிர்ப்பு உணர்ச்சி இருக்கும் காரணத்தால், இந்தக் கருத்தை அவர் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திராவிடம் மற்றும் தமிழினம் குறித்த தனது விளக்கத்தையும் திருமாவளவன் கூறியுள்ளார்.
அதன்படி, திராவிடம் என்பது மரபினம் எனக் குறிப்பிட்ட அவர், அதற்குள் இருக்கும் தேசிய இனங்களில் தமிழும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார். இதனை வெவ்வேறாக பிரித்து பார்க்க வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டிய அவர் திராவிடத்தை பாதுகாப்போம் என்று கூறினாலே, தமிழ் மற்றும் தமிழர்களை பாதுகாப்போம் என்று தான் பொருள் எனக் கூறியுள்ளார். மேலும், பெரியார் மற்றும் திராவிட கட்சிகளுக்கு முன்பே திராவிடம் என்ற சொல்லை பண்டிதர் அயோத்திதாசர் பயன்படுத்தியதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
முன்னதாக, திருமாவளவனால் முதலமைச்சராக முடியாது எனவும் அவருக்கு அதற்காகன தகுதி இல்லையெனவும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியதற்கு, சீமான் கடும் எதிர்வினை ஆற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முதலமைச்சர் ஆகும் அனைத்து தகுதிகளும் திருமாவளவனுக்கு இருப்பதாக கூறிய சீமான், திருமாவை ஆதரித்து எப்படியாவது முதலமைச்சர் ஆக்குவோம் எனக் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.