Thirumavalavan | விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென பதவி விலகியிருப்பது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பல வகையில் ஐயத்தையும் அச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. அவர் என்ன நெருக்கடியில் இந்தச் சூழலில் பதவி விலகி இருக்கிறார். அவரை அச்சுறுத்தினார்களா? அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையில் பதவி விலகினாரா என்ற கேள்விகள் எழுகிறது.
இன்னும் ஓரிரு நாள்களில் நாடாளுன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட நிலையில் இவரின் பதவி விலகல் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் ஆணையர் அருண் கோயலில் ராஜினாமா நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரின் ராஜினாமாவை சனிக்கிழமை (மார்ச் 9) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
திருமாவளவன் தி.மு.க, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் உள்ளார்.
இவருக்கு கடந்த தேர்தலை போல் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் கடந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“