/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiruma.jpg)
நாங்குநேரி பெருந்தெருவில் விசிக கொடி ஏற்றிய கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் வசிக்கும் சின்னத்துரை என்பவர் வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவருகிறார்.
அவரின் வீட்டுக்குள் புகுந்த மாணவர்கள், அவரை சரமாரியாக வெட்டினார்கள். இதில், தடுக்க சென்ற அவரின் தங்கைக்கும் வெட்டு விழுந்தது.
இந்தத் தாக்குதலை நேரில் பார்த்த சின்னத்துரை தாத்தா மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தமிழ்நாடு முழுக்க இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது சின்னத்துரை மற்றும் அவரின் தங்கைக்கு தமிழ்நாடு அரசு உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மாணவன் சின்னத்துரை சந்திராசெல்வி ஆகியோர் மீது சாதிய கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் #நான்குநேரி பெருந்தெருவில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை இன்று ஏற்றி வைத்தேன்.#விசிக_கொடிpic.twitter.com/8k0VJfroBD
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 20, 2023
இந்த நிலையில், சின்னத்துரையை விசிக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, நாங்குநேரிக்கு விசிட் அடித்த அவர், அங்குள்ள பெருந்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றினார்.
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக மாணவர் சின்னத்துரையை பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, திருநெல்வேலி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.