சிதம்பரம் தொகிடியில் போட்டியிடும் வி.சி.க தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகி முருகனாந்தம் வீட்டில் தங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இரண்டு மணிநேரம் நடைபெற்ற சோதனையில் பணமோ, ஆவணமோ கிடைத்ததாக தகவல் வெளியாகவில்லை.
முருகானந்தன் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் முருகானந்தன் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.