நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. அதனால், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் மாணவர்களின் உதவியுடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவராக வேணு சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளர். ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அரசின் இந்த முயற்சிக்கு வரவேற்பும் விமர்சனங்களும் சேர்ந்தே கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. அதனால், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்ச் சமூகத்துக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும் என நினைக்கும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்று சேர்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி அவர்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும்.
மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம்பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.
ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயக பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"