சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி போராட்டம்: திருமாவளவனின் மைக்கை பறித்து மேடையிலிருந்து இறங்கச் சொன்னதால் பரபரப்பு

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில், திருமாவளவன் பேசியபோது அவரிடம் இருந்து மைக்கை பறித்து மேடையை விட்டு கீழே இறங்கச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

Thirumavalavan MP insulted, Thirumavalavan MP insulted at protest in Chennai, திருமாவளவன் புறக்கணிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு கோரி போராட்டம், விசிக, பிசி, எம்பிசி, டிஎண்டி, vck, bc mbc dnt, caste wise census demand protest, thirumavalavan, ayyakannu

சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை கிண்டியில் நடைபெற்ற போராட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், ஆதரவு தெரிவித்து பேசியபோது போரட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அவருடைய மைக்கை பறித்து மேடையை விட்டு கீழ் இறங்கச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை, கிண்டியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அனைத்து சமூகத்தையும் அறவணைக்கும் வகையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து முழக்கமிட்டார்.

அப்போது, போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், யாரும் எதிர்பாராத நேரத்தில், திடீரென மேடை மீது ஏறி திருமாவளவனின் கையில் இருந்த மைக்கை பறித்தார். பின்னர், எங்களின் சமூகத்தை பற்றி எங்களின் சமூகத்தைச் சேர்ந்தவரே பேச வேண்டும் என்று பொதுக் குழுவில் முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் ஒரு கட்சியில் இருக்கிறீர்கள். அதனால், பொதுக் குழு கூட்டத்தின் முடிவுகள் பற்றி உங்களுக்கு தெரியும். எனவே, திருமாவளவனை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறுகிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி திருமாவளவன் கோஷமிட்டுக்கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் மைக்கை பறித்து மேடையைவிட்டு இறங்க வேண்டும் என்று கூறப்பட்டதால் திடுக்கிட்ட திருமாவளவன், எதுவும் கூறாமல் மேடையை விட்டு இறங்கி கிளம்பினார். அப்போது, தனது காரில் ஏறிய திருமாவளவனிடம், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சிறப்பாக பேசினீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். திருமாவளவன் அவரிடம், தன்னை மேடையில் இருந்து கீழே இறங்கச் சொன்ன நபர் யார் என்று கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சிதம்பரம் தொகுதி எம்.பி-யும் விசிக தலைவருமான திருமாவளவன், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது அவரிடம் இருந்து மைக்கை பறித்து மேடையை விட்டு கீழே இறங்கச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thirumavalavan mp insulted at caste wise census demanding protest stage in chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com